உள்நாடு

Pfizer BioNTech தடுப்பூசிக்கு மாத்திரமே அவசர நிலைமைகளின் கீழ் அனுமதி [VIDEO]

(UTV | கொழும்பு) –   ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே :

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளடங்கலாக Pfizer BioNTech தடுப்பூசிக்கு மாத்திரம் அவசர நிலைமைகளின் பட்டியலில் அனுமதி வழங்கியுள்ளது. நாமும் அரசு என்ற ரீதியில் உரிய தடுப்பூசியினை மக்களுக்கு வழங்கவுள்ளோம்.

தடுப்பூசி நாட்டை வந்தடைந்ததன் மறுநாளிலிருந்து அதனை வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகிவிடும். தடுப்பூசியை முதற்கட்டமாக யாருக்கு வழங்குவது, அடுத்தகட்டமாக யாருக்கு வழங்குவது என்பவற்றுக்கான ஒழுங்குபடுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன. அதனை களஞ்சியப்படுத்துவதற்கு எடுத்து செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

இயற்கையின் கோரம் : 23 வயதுடைய யுவதியின் சடலம் மீட்பு

சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார்

‘மக்களின் 70 சதவீத சேமிப்பை ராஜபக்ஷ திருடிவிட்டார்’