(UTV | இந்தியா) – இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம் இந்தியா முழுவதும் இன்று உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது.
டெல்லியில் இன்று நடைபெறும் 72 ஆவது குடியரசு தின விழவில் இந்தியாவின் இராணுவ வலிமை, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை ராஜபாதையில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
குடியரசு தின விழாவினையொட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய மக்களிடம் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆற்றிய உரையில்,
இந்தியர்கள், நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த ஒரு குடும்பத்தைப் போலச் செயல்பட்டு, கொரோனா பெருந்தொற்று என்ற எதிரியிடம் இருந்து ஒருவரை ஒருவர் காப்பாற்றினார்கள் என்றார்.
இந்தியாவில் குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்து, இந்தியா ஓர் சுதந்திர குடியரசாக மாறிய நாளாக இது அனுசரிக்கப்படுகிறது.
நவம்பர் 26, 1949 அன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு, ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஆண்டு, இந்தியா ஒரு குடியரசு நாடாக 72 ஆண்டினை கொண்டாடுகிறது.