உள்நாடு

மெகசின் சிறைச்சாலை பொதிகள் விவகாரம்

(UTV | கொழும்பு) – கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 திகதி முதல் டிசம்பர் 31 வரையான காலப் பகுதியில் மெகசின் சிறைச்சாலை சுவர் மீது சட்டவிரோதமாக எறியப்பட்ட 54 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொதிகள் சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 47 கையடக்க தொலைபேசிகள், 22 சிம் அட்டைகள், கையடக்க தொலைபேசிக்கு பயன்படுத்தப்படும் 57 மின்கலன்கள், 13 மின்னேற்றிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

இது தவிர 16 ஹெரோயின் சிறிய பொதிகளும் 9 ஐஸ் ரக போதைப்பொருள் பொதிகளும், சிறிய ரக கஞ்சா போதை பொருள் பொதிகள் 34ம், 569 புகையிலைகளும் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 71 சிகரட்டுக்கள், 14 லைட்டர்கள், 7 பீடி கட்டுக்கள், 400 மில்லி மீற்றர் மதுபான போத்தல் என்பனவும் மீட்கப்பட்டதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொழிற்சங்க நடவடிக்கையில் 17 தொழிற்சங்கங்கள்!

அமைச்சுப்பதவிகளில் மாற்றம்

சட்ட விரோத காணியை அபகரிப்பு – ஜீவன் தொண்டமானினால் தடுத்து நிறுத்தம்.