கிசு கிசு

பவி உள்ளே வாசு வெளியே

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சிகிச்சைகளை முடித்துக்கொண்டு, பூரணமாகக் குணமடைந்து நேற்று (24) வீடுதிரும்பினார் என அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தொற்றுக்குள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும், அவரது கணவரும் ஹிக்கடுவை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவ்விருவருடன் நெருங்கிப் பழகியவர்களில் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுகாதார அமைச்சு மூடப்பட்டு, அதன் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கலந்துகொண்டிருந்துள்ளார்.

இதையடுத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகம் மூடப்பட்டு, தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்ற அமர்வுகளிலும் கடந்த வாரத்தில் கலந்து கொண்டிருப்பதால், அவருடன் நேரடியாகத் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம்காணும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என, பாராளுமன்றத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ரசிகரை வியப்பில் ஆழ்த்திய டோனி… வைரலாகும் வீடியோ

ஹரின் மீண்டும் UNP இல் இணைகிறார்

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது