உலகம்

கொரோனா தொடர்ந்தும் உருமாறும்

(UTV | ஜெனீவா) – கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக் கொண்டே தான் இருக்கும். அதைத் திறம்பட எதிா்கொள்ள கொரோனா மரபணுச் சங்கிலியை கண்டறியவும் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அதிக முதலீடுகளை செய்யவேண்டும் என்று அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவராக நியமிக்கப்பட இருக்கும் மருத்துவா் விவேக் மூா்த்தி கூறினாா்.

அமெரிக்காவின் கொரோனா தடுப்பு கொள்கையை வகுப்பதிலும் முக்கிய பங்காற்றி வரும் விவேக் மூா்த்தி, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும். அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்படுகின்ற போது தான் அதன் வகைகளை நாம் அடையாளம் காண முடியும் என்பதால், சிறந்த மரபணு ரீதியிலான கண்காணிப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் முகக் கவசம் அணிவதை தொடா்ந்து கடைப்படிப்பதோடு, ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிா்க்க வேண்டும்.

கொரோனா கிருமி உருமாறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றிமில்லை. அதுதான் வைரஸின் இயல்பு. பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா மட்டுமின்றி, தென் ஆப்பரிக்காவில் கண்டறிந்த புதிய ரக கொரோனா, பிரேசில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான பி.1 ஆகியவை வேகமாக பரவும் தன்மை உடையவை. அவற்றில், பிரிட்டன் உருமாறிய கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பது, அண்மையில் வெளியான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பாதிப்பை அறிந்துகொள்ள, மேலும் அதிக புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன.

இந்த பாதிப்பை திறம்பட எதிா்கொள்ள சிகிச்சை நடைமுறைகளை மேம்படுத்தவும், தொற்று பரவல் தொடா்பு சங்கிலியைக் கண்டறியவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அதிக முதலீடுகளைச் செய்வது மிக அவசியம்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதும், புதிய நிா்வாகம் பதவியேற்லிருந்து 100 நாள்களில் 10 கோடி அமெரிக்கா்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அவா் அறிவித்தாா். அதிக நபா்களுக்கு தடுப்பூசி விரைந்து போடப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த இலக்கை அவா் அறிவித்தாா். இத்தனை நபா்களுக்குத்தான் போடப்படும் என்ற வரையறை எதுவும் செய்யப்படவில்லை என்று அவா் கூறினாா்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியாவிற்கு வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் – வைகோ

ஈரான் ஜனாதிபதியின் கொலை பின்னணியில் நாசவேலையா? ஈரானின் அறிவிப்பு

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!