(UTV | கொழும்பு) – நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மூவரடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம் நவாஸின் தலைமையிலான குறித்த விசாரணை குழு இம்மாதம் 20ம் திகதி முதல் செயற்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්