(UTV | கொழும்பு) – நாட்டின் சர்வதேச விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது வர்த்தக விமானமான ஓமான் மஸ்கட் நகரில் இருந்து WY371 எனும் விமானம் இன்று முற்பகல் 7.40 அளவில் கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.