கேளிக்கை

ஃபீல் பண்ண நான் இங்கு வரவில்லை : ஷெர்லின் சோப்ரா

(UTV | இந்தியா) –  பிரபல பாலிவுட் இயக்குநர் சாஜித் கான் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஷெர்லின் சோப்ரா சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்துள்ளார். சாஜித் கான் மீது பாலியல் புகார் கூறும் முதல் நடிகை ஷெர்லின் சோப்ரா கிடையாது.

இந்தியாவில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்தபோது பிரபல பாலிவுட் இயக்குநர் சாஜித் கான் மீது நடிகைகள், பெண் பத்திரிகையாளர் என்று பலர் பாலியல் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் பிரபல கவர்ச்சி நடிகையான ஷெர்லின் சோப்ராவும் சாஜித் கான் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

சாஜித் கான் பற்றி ஷெர்லின் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கடந்த 2005ம் ஆண்டு என் தந்தை இறந்த சில நாட்களில் நான் சாஜித் கானை சந்தித்தேன். அப்பொழுது அவர் தன் ஆணுறுப்பை பேண்ட்டில் இருந்து வெளியே எடுத்து என்னை தொடச் சொன்னார். அது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். உங்களின் ஆணுறுப்பை ஃபீல் பண்ண நான் இங்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னது நினைவிருக்கிறது.

சாஜித் கான் மீது மறைந்த நடிகை ஜியா கானின் சகோதரி பாலியல் புகார் தெரிவித்ததை பார்த்த ஷெர்லின் இப்படி ட்வீட் செய்தார்.

ஷெர்லினின் ட்வீட்டை பார்த்த ஒருவர் இதை ஏன் முன்பே சொல்லவில்லை என்று கேட்டார். அதற்கு ஷெர்லினோ, பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் அவருக்கு ஆதரவாக பேசுவார்கள். பாலிவுட் மாஃபியா வலிமையானது எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

வைரமுத்துவையே கல்யாணம் செஞ்சிருக்கலாம்-சின்மயி சொன்ன பதில்

பேட்மிண்டன் வீராங்கனை ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பிரபல நடிகர்

சர்கார்’ படத்தில் இருந்து `சிம்டாங்காரன்’ ரிலீஸ்…-(VIDEO)