கேளிக்கை

நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

(UTV | இந்தியா) – தான் இயக்கிய பூமி படத்தை பற்றி மிகவும் தரக்குறைவாய் வந்த விமர்சனத்தை பார்த்த லக்ஷ்மண், நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று ட்விட்டரில் சாபம் விட்டுள்ளார்.

லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி விவசாயியாக நடித்த பூமி படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக கடந்த 14ம் தேதி ஓடிடியில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் அது ஓட்டை, இது ஓட்டை என்று குறை சொல்லியுள்ளனர். ஜெயம் ரவியின் கெரியரில் இப்படி ஒரு மோசமான படத்தை பார்க்கவில்லை. அவர் எப்படித் தான் பூமி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாரோ என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

ஒரு நாசா விஞ்ஞானி தமிழகத்தில் விவசாயம் செய்து அறிவுரை வழங்கியே படம் பார்த்தவர்களை கடுப்பேற்றிவிட்டார் என்று காட்டமான விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் சமூக வலைதளவாசி ஒருவர் ட்விட்டரில் கூறியதாவது,

சுறா, ஆழ்வார், அஞ்சான், ராஜபாட்டை வரிசையில் நான் பார்த்த படங்களில் மோசமான ஒன்று பூமி. ஆரம்பம் முதல் இறுதி வரை ஒன்றும் கை கொடுக்கவில்லை. லக்ஷ்மண் இயக்கத்தில் நடிப்பதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள் ஜெயம் ரவி என்றார்.

அந்த ட்வீட்டை பார்த்த மற்றொருவரோ, தற்போது இயக்குநர் லக்ஷ்மண் உங்களை பிளாக் செய்வார் என்றார்.

பூமி பற்றி இப்படி ட்விட்டரில் நடந்த விவாதத்தை பார்த்த லக்ஷ்மண் கமெண்ட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் லக்ஷ்மண் கூறியிருப்பதாவது,

சார், நான் நம்ம எல்லோரும், ஃபியூச்சர் ஜெனரனேஷன் நல்லா இருக்கணும்னு நினைச்சேன். உங்களுக்காக தான் எடுத்தேன் ப்ரோ. ரோமியோ ஜூலியட் எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ. நீங்கள் சூப்பர் ப்ரோ. நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள், நான் தோத்துட்டேன் என தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மணின் ட்வீட்டை பார்த்த சிலர் அவரை பாராட்டியுள்ளனர். விவசாயம் பத்தி பேசினால் இப்படித் தான் கிண்டல் செய்வார்கள், பசித்தால் தான் அதன் அருமை தெரியும் என்று கூறியுள்ளனர். சிலரோ லக்ஷ்மணை கலாய்த்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

அமிதாப் – அபிஷேக் பச்சனுக்கு கொரோனா

வில்லியாக நடிக்க ஆசைப்படும் மடோனா

ஏ.ஆர்.ரகுமானுடன் இணையும் சிவகார்த்திகேயன்