(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஔடதமொன்றை தயாாித்த கேகாலையின் தம்மிக்க பண்டார என்பவருக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு எதிராக பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தம்மிக்க பண்டார என்பவரால் தயாாிக்கப்பட்ட ஔடதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தந்த சிலருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி ஔடதத்தை கொள்வனவு செய்வதற்காக வருகை தந்திருந்த மேலைத்தேய வைத்தியர் ஒருவருடனேயே இவர் முரண்பட்டுள்ளதாக வரக்காப்பொல பொலிசார் தொிவித்துள்ளனர்.
கேகாலை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தாின் கீழ் நடைபெறும் இவ்விசாரணைகளின் பின் தம்மிக்க பண்டார அநேகமாக கைதாவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්