(UTV | ரஷ்யா) – ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு (Alexei Navalny) 30 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியன வலியுறுத்தியுள்ள நிலையிலேயே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு விஷத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்த அவர், நாடு திரும்பிய நிலையில் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன் மீது மேற்கொள்ளப்பட்ட விஷத்தாக்குதலுக்கு ரஷ்ய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என அவர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், இந்த கருத்தை முற்றாக மறுப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්