உலகம்

அலெக்ஸி நவால்னி கைது

(UTV | ரஷ்யா) – ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, கடந்த ஆண்டு விஷத்தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நாடு திரும்பிய அவரது விமானம், மொஸ்கோவில் இருந்து ஷ்ரெமெட்யேவோ (Sheremetyevo) விமான நிலையம் நோக்கி திருப்பிவிடப்பட்டு, அங்குள்ள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் மீது மேற்கொள்ளப்பட்ட விஷத் தாக்குதலுக்கு ரஷ்ய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என அலெக்ஸி நவால்னி குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், இந்த கருத்தை முற்றாக மறுப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்அலெக்ஸி நவால்னியை உடனடியாக விடுதலை செய்யுமாறு, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு 3 ஆண்டுகள் சிறை

அல்-ஜெசீரா செய்தி நிறுவனத்தை மூடிய இஸ்ரேல்!

இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட்