விளையாட்டு

இலங்கையுடனான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவு பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட இருதரப்பு மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. அத்துடன் ஐசிசி உலக டெஸ்ட சம்பியன்ஷிப்புக்கான 60 புள்ளிகளையும் இங்கிலாந்து பெற்றுக் கொண்டது.

இப்போட்டியில் 74 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 3 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று 7விக்கெட்களால் வெற்றியீட்டியது.

போட்டியின் நான்காம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து 3 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஜொனி பெயார்ஸ்டோவ் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் டான் லோரன்ஸ் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதலாவது இன்னிங்ஸில் 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதலாவது இன்னிங்ஸில் 421 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 359 ஓட்டங்களைப் பெற்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐ.பி.எல் அட்டவணை வெளியாகியது

100 கோடி கிரிக்கெட் ரசிகர்களில் 90 சதவிதம் பேர் இந்தியாவில் உள்ளனர்

சகலதுறை ஆட்டக்காரர் ஜே.பீ.டுமினி ஓய்வு?