உள்நாடு

ராஜித உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு

(UTV | கொழும்பு) – முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் போது நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் குறித்த குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டது.

குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்ட பின்னர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவரையும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க நீதிபதி இன்று(18) உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளம் பெறப்பட்டு அவர்களின் முன்னைய குற்றங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நாவலப்பிட்டியில் கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு!

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்திகள்

வெட்டு காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் உயிரிழப்பு