உள்நாடு

தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – மீளவும் தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் இன்று(18) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.55 ற்கு பதுளை நோக்கி பொடிமெனிகே கடுகதி ரயில், காலை 5.55ற்கு கல்கிஸ்ஸயிலிருந்து காங்கேசந்துறை நோக்கி யாழ்தேவி ரயில் மற்றும் பிற்பகல் 3.35 ற்கு கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி கடுகதி ரயிலும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன.

இதே வேளை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை, மட்டக்களப்பு, மாத்தறை, பெலியத்த ஆகிய இடங்களுக்கும் ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

ஆசன முன்பதிவுகளை நாளை(19) முதல் மேற்கொள்ளலாம் என யாழ் பிரதான ரயில் நிலையம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பிற்பகல் 02 மணி வரை பதிவான வாக்குப்பதிவு

சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கத் தயார் – கோட்டாபய ராஜபக்ஷ

editor