உலகம்

உலகின் மிக சக்தி வாய்ந்த ஆயுதம்

(UTV |  வடகொரியா) – வடகொரியாவால் உலகின் சக்தி வாய்ந்த ஆயுதம் என்று கூறப்படுவதை, அணி வகுப்பில் பார்க்கும் போது, ஜனாதிபதி கிம் ஜாங் உன் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலகநாடுகளை மிரட்டி வந்த நாடு தான் வடகொரியா.

இதனால் கொரியா தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வந்தது. அதன் பின் வடகொரியா, அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது, ஆனால் அதில் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் உடன்படவில்லை, அமெரிக்கா சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை என கிம் ஜாங் உன் கூறினார்.

அதன் காரணமாக அமெரிக்காவை தங்களுடைய எதிரி நாடாக அவர் பார்க்கிறார். மர்மங்கள் நிறைந்த நாடு வடகொரியா, இங்கு என்ன நடக்கும் என்பதை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது என்பதால், உலக நாடுகளின் கவனம் அவ்வப்போது வடகொரியா மிது இருக்கும்.

குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை தொடர்ந்து கண்காணிப்பது தான் வேலை, இந்நிலையில், வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில், இராணுவ அணிவகுப்பு நடந்துள்ளது.

இந்த இராணுவ அணிவகுப்பின் போது, வடகொரியாவால் உலகின் சக்தி வாய்ந்த ஆயுதம் என்று கூறப்படும், நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்படும் பலிஸ்டிக் ஏவுகணை(SLBM)காணப்பட்டது. அதாவது இந்த ஆயுதம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பலிஸ்டிக் ஏவுகணையை ஏவும் திறன் கொண்டதாம்.

இந்த ஆயுதத்தில் நவீன மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளதாம், இதன் மூலம் பல இலக்குகளை தாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

அந்த சக்தி வாய்ந்த ஆயுதத்தை பார்க்கும் போது, கிம் ஜாங் உன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்து சிர்ப்பை வெளிப்படுத்தினார். கிம் இல் சுங் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த இதைத் தவிர பீரங்கிகள், ராக்கெட் ஏவுகணைகள் உள்ளிட்ட பலவை இடம் பிடித்திருந்தன. ​​

Related posts

சீனாவின் முன்னாள் தலைவர் ஜியாங் ஜெமின் காலமானார்.

மலேசியா விமான நிலையத்தில் வாயு கசிவு

ரோஹிங்கியா அகதிகள் முகாமொன்றில் பாரிய தீப்பரவல்