(UTV | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை YouTube நிறுவனம் நீக்கியுள்ளது.
வன்முறையைத் தூண்டும் வகையிலும் விதிகளுக்கு புறம்பாக இருந்ததாகவும் அதனை YouTube நிறுவனம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நிறுவனம் ட்ரம்பின் YouTube கணக்கில் புதிய காணொளிகள் தரவேற்றம் செய்யப்படுவதையும் நேரலை காணொளிகளையும் 7 நாட்களுக்கு தடை செய்துள்ளது.
எனினும், இந்த கால எல்லை நீடிக்கப்படலாம் என YouTube தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் போது பாராளுமன்றத்தின் முன்பு குவிந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கு ட்ரம்ப் வெளியிட்ட Twitter பதிவே கலவரத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதனையடுத்து, அவரது Twitter பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது.
அந்த வகையில் Twitter, Facebook, Instagram ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது YouTube நிறுவனமும் ட்ரம்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.