உலகம்

மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

(UTV | இந்தியா) – தமிழகத்தில் மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சில இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கி இருந்தது தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூச்சக்கல்லூர் உள்ளிட்ட 3 இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில், காசிநாயக்கன்பட்டி, தொக்கியம், கூத்தூர் உள்ளிட்ட 9 இடங்களில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, சிவானந்தபுரம், மூஞ்சூர்பட்டு, புலிமேடு, அரியூர் உள்ளிட்ட 25 இடங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் தெற்கு தமறாக்கி கிராமத்திலும், ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பிரேசில் இயற்கை தாண்டவத்தில் 94 பேர் பலி

ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்

எந்தவொரு பதில் தாக்குதல்களிளும் அமெரிக்கா இணையப் போவதில்லை