உள்நாடு

ஐ.தே.க விசேட செயற்குழுக் கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கட்சியில் தற்போது வெற்றிடமாகவுள்ள பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அதிகாரிகள் குழாமை நியமிப்பது தொடர்பில், இதன்போது விசேடமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஷமல் செனரத் தெரிவித்துள்ளார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு மேலதிகமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், பிரதி பொதுச் செயலாளர் மற்றும் உப செயலாளர் உள்ளிட்ட பதவிகளும் வெற்றிடமாகவுள்ளன

இந்நிலையில், இன்றைய செயற்குழு கூட்டத்தில் பெரும்பாலும் குறித்த பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படலாம் என பதில் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, இதுவரை எவரும் பெயரிடப்பாத பின்னணியில், அது தொடர்பிலும் இன்றைய செயற்குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

மேலும் ஒரு தொகை பைசர் நாட்டிற்கு

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்