உள்நாடு

பாராளுமன்றில் இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற பணிக்குழாமினருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று முதல் நாளை மறுதினம் வரை பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்கள், தேவவையாயின் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுறுதியான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்புடைய பாராளுமன்ற பணிக்குழாமை சேர்ந்த 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம், முன்னதாக அமைச்சர் தயாசிறிய ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேவுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து. அவருடனும், பாராளுமன்ற உறுப்பினர் ரவூக் ஹக்கீமுடனும் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிறைக் கைதிகள் 285 பேருக்கு கொவிட் உறுதி

திங்கட்கிழமை முதல் கருப்பு வாரம்

A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வௌியானது