உள்நாடு

கொவிட்19 : தொற்றார்கள் 48,000 கடந்தது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயத்தில் 540 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 48380 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 536 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 44,618 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும் நேற்று கொவிட்19 உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் 6823 கொவிட் 19 நோயாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் உறுதிப்படுத்தினார்.

No photo description available.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயிரிழந்த உடல்களின் தகனம் : ஐ.நா பிரதமருக்கு கடிதம்

விசேட வர்த்தமானி மூலம் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பேஸ்புக் விருந்து- 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது