விளையாட்டு

அகில தொடர்பில் ஐசிசி நிலைப்பாடு

(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணி ஐ.சி.சி.யின் சட்டவிதிகளுக்குட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அகில தனஞ்சய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டு பந்துவீச முடியுமென சர்வதேச கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

அகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணியில் கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சந்தேகம் எழுந்தது. பின்னர் முறையற்ற பந்து வீச்சுக் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவுக்கு ஓராண்டு காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. தடை விதித்திருந்த நிலையில், தற்போது இந்த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முதலாம் நாள் ஆட்ட முடிவின் போது 2 ஓட்டங்களைப் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி!!

முதல் போட்டியில் இருந்து பாபர் அசாம் விலகல்

எதிர்வரும் 15 இலங்கை – பங்களாதேஷ் ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி