உள்நாடு

ராஜபக்ஷ அரசுடன் எவ்வித கணக்குகளையும் நாம் வைத்துக் கொள்ளவில்லை [VIDEO]

(UTV | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (08) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இதன்போது ஊடகங்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில்;

கேள்வி : நீங்கள் உண்மையிலேயே அதிருப்தியில் உள்ளீர்களா?
அரசியல் போதுமாகிவிட்டதா?

பதில் :அவ்வாறு இல்லை

கேள்வி : சமூக ஊடகங்களில் இவ்வாறு கதை ஒன்று பரப்பப்பட்டது, அதாவது இருபதாம் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு கட்சி சார்பில் வாக்களியுங்கள் பின்னர் அதனை நீங்கள் உங்களுக்கு சார்பாக்க முயற்சித்ததாக கூறப்படுகின்றது. அதாவது விடுதலை தொடர்பில்..

பதில் : விடுதலையாக யாரும் எமக்கு உதவவில்லை, நீதிமன்றம் தான் எம்மை விடுதலை செய்தது. செய்யாத தவறுக்கு, எனக்கு விதிக்கப்பட்ட குற்றச்சாட்டு தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் சாட்டப்பட்டது. மியூசியம் தொடர்பிலான வழக்கு. நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஏனைய அமைச்சர்களுக்கும் இது தான் நடந்தது. என்னை சிறையில் அடைத்து படுக்க பாய் கூட எனக்கு தரவில்லை, அவ்வாறு துன்பங்களை எனக்கு தந்தார்கள். க்ரீம் க்ரேகர் பிஸ்கட் பக்கட்டு ஒன்றினை எனது மனைவி கொண்டு வந்து தந்தார். அதுவும் பாராளுமன்றில் என்னை சந்தித்த போது, அதனைக் கூட உள்ளே எடுத்து செல்ல அனுமதி வழங்கவில்லை. அவ்வாறு தான் எம்மை சோதித்தார்கள். அதனால் இந்த அரசுடன் எவ்வித கணக்குகளையும் நாம் வைத்துக் கொள்ளவில்லை. இது அவ்வாறு ஒன்று சேர்ந்து கொள்ளும் அரசும் அல்ல, சமூகத்திற்கு செய்யும் துன்பத்தினை பொறுக்க முடியாதுள்ளது. அதனை இன்று பாராளுமன்றில் தெரிவிக்கிறேன்.. கேட்டுக்கொள்ளுங்கள்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள் கான்ஸ்டபள் ஒருவர் தற்கொலை

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவுக்கு பிடியாணை

பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது – ரணில் விக்ரமசிங்க