உள்நாடுவணிகம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. ஆயிரம் கனவானது

(UTV | கொழும்பு) – தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக்கொடுக்க கம்பனிகள் மறுப்பு தெரிவித்ததனையடுத்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் வெளியேறியுள்ளன.

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை நேற்று'(07) திகதி தொழில் அமைச்சில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச் செயலாளரும் இராஜங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

“.. தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்றது.

அதில் கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் வருகை தந்திருந்தன. அதில் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள இணக்கப்பாட்டு கம்பனிகள் வரவில்லை இதனால் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரு முடிவு எடுத்து வெளியேறினோம். நாங்கள் இதன் போது தொழில் அமைச்சுக்கு அறிவித்தோம்.

அரசாங்கம் இன்று ஒரு கொள்கையில் இருக்கிறது தோட்டத்தில் வேலை செய்கின்ற ஒட்டு மொத்த தொழிலாளர்களுக்கும் ஆயிரம் ரூபா கிடைத்தாக வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆகவே அரசாங்கம் அமைச்சரவையில அடுத்த வாரம் தீர்மானித்து வர்த்தமானியில் நியாயமான சம்பளத்தினை வெளியிட்டால் நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற தயாராக இருக்கிறோம் சில தொழிற்சங்கங்களும் கூட்டு ஒப்பந்தம் இருப்பதால் தான் அவர்களுக்கு சம்பளம் பெற்றுக்கொடுக்க முடியவில்லை..” எனவும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இராஜினாமா

‘எரிபொருளுக்கான முழுப் பணம் செலுத்தப்பட்டது’ – காஞ்சனா