உலகம்

ஜனவரி 10ம் திகதி வரை ஊரடங்கு அமுலில்

(UTV |  ஜேர்மன்) – கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நேற்றுவரை ஜெர்மனியில் 18 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது குறித்து அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.

அதன்படி ஜெர்மனியில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமுல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, ஜனவரி 10-ம் திகதி வரை ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், ஜேர்மனியில் அமுலில் உள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31ம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த முழு ஊரடங்கை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது என ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காசாவில், 4.23 லட்சம் பேர் தெற்கு நோக்கிச் சென்றுள்ளனர் : ஐ.நா தகவல்

ஜப்பான் தனது எல்லைகளை மூடியது

எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவிய நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை