(UTV | கொழும்பு) – எதிர்வரும் தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், இலங்கையர்களுக்குத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க முடியுமென உறுதியான அறிவிப்பொன்றைத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சின் போது, தெரிவித்த ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கான கலந்துரையாடல் தற்போது நிறைவுறும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அவர்,எதிர்வரும் நாட்களில் சரியான பதிலைக் கூறமுடியும் என்றார். பெப்ரவரி மாதத்தின் இறுதியிலோ, மார்ச் முதல் வாரத்திலோ தடுப்பூசியைப் பெறமுடியும், தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உறுதியாகப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
முதலில் இந்தத் தடுப்பூசி, சுகாதார சேவை பணியாளர்களுக்கே வழங்கப்படும். தற்போது 155 000 பணியாளர்கள் உள்ளனர். எனவே, இவர்களுக்கு வழங்குமாறே உலக சுகாதார ஸ்தாபனமும் பரிந்துரைக்கின்றது என்றார். இரண்டாவதாக முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் இந்தத் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படும். இவ்வாறு இவர்களில் 127 500 பேர் இருக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.