(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 468 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.
இவர்களில் ஒருவர் வௌிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவராவார். ஏனைய தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 2 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் 86 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.