உள்நாடு

சுகாதார ஆலோசனைகளை நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை

(UTV | கொழும்பு) –  கொரோனா ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளை சில நிறுவனங்கள் பின்பற்றவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும் அவ்வாறான நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய, நிறுவனங்களுக்குள் நுழையும் நபர்கள் தொடர்பான பதிவேடுகளை பராமரித்தல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை கழுவுவதற்கான இடமொன்றை ஒதுக்குதல், உடல் வெப்பத்தை பரிசோதித்து நிறுவனத்துக்குள் அனுமதித்தல் போன்ற விடயங்களைப் பின்பற்றுவது கட்டாயம் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறித்த விடயங்கள் சில நிறுவனங்களில் பின்பற்றப்படுவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்

எனவே, நிறுவன பிரதானிகள், தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விடயங்களைப் பின்பற்றுவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மெனிங் சந்தை மீண்டும் 4 நாட்களுக்கு பூட்டு

முதலாம் திகதிற்கு முன்னர் பதிவு செய்யுமாறு பொலிஸார் கோரிக்கை

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி