(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 562 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 36,717 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.