வகைப்படுத்தப்படாத

மே தினத்திற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சி செலவிடும் பணம் தொடர்பில் நளின்

(UDHAYAM, COLOMBO) – மே தினத்திற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சி செலவிடும் பணம் கடந்த அரசாங்க காலப்பகுதியில் மோசடியாக சம்பாதித்தவை என ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த அரசாங்க காலப்பகுதியில் மோசடியாக பெற்று கொண்ட பணத்தை தற்போது செலவு செய்கின்றனர்.

திருடிய பணத்தை கொண்டு தங்கு தடையின்றி அவர்களுக்கு மே தின கூட்டத்தை நடாத்த முடியும் என நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்கும்

கனமழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

ஹங்வெல்லயில் இடம்பெற்ற பதறவைக்கும் கொள்ளை