விளையாட்டு

ரொனால்டோதான் சிறந்த வீரர் : பீலே

(UTV | கொழும்பு) – சமீபத்தில் க்ளப் ஆட்டங்களில் அதிக கோல் அடித்த பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்த நிலையில், ரொனால்டோதான் சிறந்த வீரர் என பீலே தெரிவித்துள்ளார்.

தற்கால கால்பந்தாட்ட போட்டிகளில் உலக அளவில் அதிகமான ரசிகர்களை கொண்டவர்களாகவும், கால்பந்தாட்டத்தில் சூரர்களாகவும் கருதப்படுபவர்கள் லியோ மெஸ்சி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்நிலையில் சமீபத்தில் பார்சிலோனா அணிக்காக 644 கோல்கள் அடித்ததன் மூலமாக க்ளப் ஆட்டங்களில் ஒரே அணிக்காக அதிக கோல் அடித்த பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய யூட்யூப் சேனலில் பேசிய முன்னாள் கால்பந்தாட்ட வீரர் பீலே “உலகிலேயே இன்று சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்றால் அது கிறிஸ்டியானோ ரொனால்டோதான். அதற்காக நாம் மெஸ்சியை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அவர் ஸ்ட்ரைக்கர் இல்லை” என கூறியுள்ளார்.

மேலும் உலகின் தலைசிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் “இந்த கேள்விக்கு பதிலளிப்பது கடினம். உலகில் நிறையா கால்பந்தாட்ட ஜாம்பவான்கள் உள்ளனர். ஆனால் எனது தேர்வு பீலேதான்” என தன் பெயரையே கூறிக் கொண்டுள்ளார்.

Related posts

இலங்கை வலைப்பந்தாட்ட அணி தென்கொரியா பயணம்

அகில தொடர்பில் ஐசிசி நிலைப்பாடு

நுவன் இற்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்