உலகம்

இந்தியாவில் மேலும் 19 பேருக்கு புதிய கொரோனா உறுதி

(UTV |  இந்தியா) – பிரித்தானியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனாவினால், இந்தியாவில் மேலும் 19 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை 25 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா அதிவேகமாக பரவி வருவதையடுத்து அந்நாட்டுடனான, விமான போக்குவரத்தை நிறுத்தியதுடன், பிரித்தானியாவில் இருந்து வந்தவர்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று(31) காலை நிலவரப்படி இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

உயிரிழந்த நடிகை பூனம் பாண்டே!

பிரேசிலில் கனமழை – 57 பேர் உயிரிழப்பு

ரீகல் சினிமா தியேட்டர்கள் முற்றாக மூடப்பட்டது