(UTV | கொழும்பு) – புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி இன்று வீடுகளை விட்டு வெளியேறுபவர்கள் மற்றும் ஒன்று கூடுபவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புது வருட கொண்டாட்டங்களை வீட்டு உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்துமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්