உள்நாடு

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 41,054 ஆக அதிகரித்துள்ளது

இதன்படி, நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 668 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 614 பேரும், சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 54 பேரும் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,701 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 8,160 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அஜித் பிரசன்ன உட்பட இருவர் மீண்டும் விளக்கமறியலில்

காமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்

கல்முனையில் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!