(UTV | கொழும்பு) – பிரித்தானியாவில் இனங்காணப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் புதிய கொரோனா வைரசு தொற்றுக்கு எதிராக இலங்கையின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துறைமுக அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவிக்கையில், நாட்டின் சகல துறைமுகங்களிலும் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
அதேவேளை, விமான நிலையங்களிலும். சகல நடவடிக்கையும் சுகாதார விதிமுறைகளின்படி முன்னெடுக்கப்படுவதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்ரசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முழு பொறுப்பும் மக்களையே சாரும் என அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.