(UTV | கொழும்பு) – 2004 டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் சுமார் 40 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழந்தனர்.
இன்றைய தினம் ஆழிப்பேரலை நினைவுகளை மீட்டும் நினைவஞ்சலி நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக இந்த வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதேவேளை, சுனாமி பேரழிவில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(26) பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தீபமேற்றி அனைவருக்கும் அக வணக்கம் செலுத்தினார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 16 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சுனாமி ஆழிப்பேரலையினால் உயிர் நீத்தவர்களுக்கான மௌன அஞ்சலியும் துஆப் பிரார்த்தனையும் கிண்ணியாவில் இடம் பெற்றது.
சுனாமி ஆழிப்பேரலை பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு கடற்கரையில் சுனாமி நினைவுதூபி அமைந்துள்ள பகுதியில் இன்று(26) 16 ஆவது சுனாமிநினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්