(UTV | பிரான்ஸ்) – பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் புதிய வகைக் கொரோனா வைரஸ் தொற்றுடன் தற்போது பிரான்ஸ் நாட்டில் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளாதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 19 ஆம் திகதி பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு புதியவகை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகள் பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதிய வகைக் கொரோனா வைரஸ் தொற்று முதல்முறையாக ஜேர்மனியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குறித்த நபர் தமது இல்லத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்படுகின்றன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්