உள்நாடு

சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கொவிட் – 19 தொற்றுக்கான காப்புறுதியை பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்க்பட்டுள்ளது.

விமான டிக்கெட்டை கொள்வனவு செய்யும்போது அல்லது ஹோட்டலை பதிவு செய்யும்போது காப்புறுதியை பெற வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், விமான நிலையங்களுக்கு புறப்படுவதற்கு 96 மணித்தியாலங்களுக்கு முன்னர், நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கூடங்களில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்து 2 வார கால பகுதிக்குள் 3 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறித்த பி.சி.ஆர் பரிசோதனைகள் ஒரே மருத்துவ கூடத்தினால் நடத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹோட்டல்களில் மாத்திரம் தங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் 02 வாரங்களில் சுதந்திரமாக நடமாட தடை விதிக்கப்படும் எனவும், ஹோட்டலில் இருந்து வௌியில் செல்லவும் ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று சுழற்சி முறையில் மின்வெட்டு

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

குவைட் நாட்டிற்கு சென்ற 32 பெண்கள் நாடு திரும்பினர்