உள்நாடு

தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  நத்தார் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில், விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரஈவ்த்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் நிலையங்களின் உதவி அத்தியட்சகர்கள் மற்றும் பொறுப்பதிகாரிகளுக்கு, இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள், பொலிஸ் தலைமையகத்தினால் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முஸ்லிம் ஜனாஸாக்களுக்கு மட்டுமா One Law One Country சட்டம்? [VIDEO]

மின்கட்டணத்திற்கு சலுகை..?

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்