உள்நாடு

பிரதமரின் நத்தார் தின வாழ்த்து

(UTV | கொழும்பு) –   நத்தார் தின வாழ்த்துச் செய்தியினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

நத்தார் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், இறைவன் மனித குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்துகின்றது. இது மனித அன்பையும், கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு நற்செய்தியாகும்.

இந்த புனிதமான நாளில் அமைதி மற்றும் கருணையின் செய்தி நம் இதயங்களில் உறுதியாக விளங்க வேண்டும். ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளை தேடிச் சென்று அவர்களுடன் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஆன்மீக ரீதியில் மனதை ஈடுபடுத்தும் ஒரு ஆழமான விடயம் இந்த நத்தார் பண்டிகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறானதொரு உன்னத தினத்தில், எவரும் அறிந்திராத பெத்லகேம் நகரில் ஒரு மாட்டுத்தொழுவத்தில் பனி கலந்த வாடைக்காற்றின் குளிரில் பிறந்த குழந்தையை தேடிச் செல்வது அர்த்தமுள்ள நத்தாருக்கு வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இந்த நத்தார் தினத்தில் இலங்கை மற்றும் உலக வாழ் அனைத்து கிறிஸ்தவர்களது இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதியும், ஆரோக்கியமும் நிறைந்து விளங்க நான் மனதார பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்!

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கைப்பேசிகளை கொண்டு செல்ல தடை

சம்பளத்தை அதிகரிக்காத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் நற்செய்தி!