(UTV | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஜனாதிபதி ட்ரம்ப் பதவி விலகும் முன்பாக தனக்கு வேண்டப்பட்டவர்களை விடுதலை செய்ய முயல்வதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் ஜோ பிடன் பதவியேற்க உள்ள நிலையில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தல் குறித்து பல வழக்குகளை தொடுத்து வருகிறார்.
இந்நிலையில் முந்தைய தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கைது செய்யப்பட்ட ட்ரம்ப்பின் ஆலோசகர்களில் ஒருவரான பால் மனஃபோர்ட், தனது மற்றொரு ஆலோசகரும், சம்பந்தியுமான ரோஜர் ஸ்டோன் மற்றும் ஈராக் படுகொலையில் தண்டனை பெற்றோர் ஆகியோரை விடுதலை செய்ய ட்ரம்ப் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்ரம்ப்பின் இந்த செயல்பாடுகளுக்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.