உள்நாடு

நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு தொடர்பில் ஷவேந்திர கருத்து

(UTV | கொழும்பு) – கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மக்களுக்கு செயற்படுமாறு இராணுவத் தளபதி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் பயணங்களை கட்டுப்படுத்துமாறும் இந்நிலைமைகளை கருத்திற்கொண்டு இன்று நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்படும் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு தொடர்பில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அவ்வாறானதொரு தீர்மானம் எட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

நேற்று நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்ட 580 பேரில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களும் அடங்குவதாக குறிப்பிட்டார்.

இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 228 பேரும் கம்பஹாவில் 108 பேரும் களுத்துறையில் 68 பேரும் திருகோணமலையில் 18 பேரும் கண்டியில் 40 பேரும் அடையாளம் காணப்பட்டதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அவிசாவளையிலுள்ள 02 தொழிற்சாலைகளில் 90 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாளை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

CEYPETCO தீர்மானமில்லை

VAT தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்