உள்நாடு

மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி

(UTV | பாணந்துறை) – நாட்டில் மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, குறித்த தொழிற்சாலையில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பாணந்துறை – ஹொரன மார்க்கத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் 80 பேருகே இவ்வாறு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பாணந்துறை நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த ஆடைத் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில், அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அத்தொழிற்சாலையில் கடமையாற்றும் ஏனைய ஊழியர்களும் பீ.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே அவர்களில் 80 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

–  கொழும்பில் அதிக இராணுவர்கள் குவித்ததட்கான கரணம் என்ன ? வெளியானது உண்மை

கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் வைரஸ் [VIDEO]

இலங்கையர்களுக்கு கொரோனா மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிப்பது இரத்து