உள்நாடு

ஆயிரம் ரூபா இழுபறி : தோட்டக் கம்பனிகளுக்கு ஒரு வார காலக்கெடு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 2021ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக் கம்பனிகளுக்கு ஒரு வார காலம் வழங்குவதற்கு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீர்மானித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பாக தோட்டத் தொழிலாளர்களின் தலைவர்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் எதிர்வரும் 27ம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரண்டு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்தே அமைச்சர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் போது, தோட்ட கம்பனி சம்மேள பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில், தொழிலாளர்கள் நாளாந்தம் மேலதிகமாக 2 கிலோ கொழுந்து பெற்றுத்தரவேண்டும். அத்துடன் தொழிலாளர்கள் தொழிலில் இருந்து விட்டுச் செல்லும் போது வழங்கும் தொழிலாளர் பணிக்கொடையை வழங்குவதற்கு அவர்கள் போதுமானளவு நாளாந்த கடமையை மேற்கொள்வதில்லை. அதனால் தொழிலாளர்கள் அனைவரும் வருடத்துக்கு 180 நாள் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றமை கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“சுடச் சொன்னது யார் என்று இன்னும் சொல்லவில்லை”

மேலும் 220 பேருக்கு கொரோனா

வெள்ளவத்தையில் நடந்த சம்பவம்: தமிழ் இளைஞன் பலி