(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 427 பேருக்கு கொவிட் 19 (கொரோனா) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,381 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.
தங்கொடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கொவிட் தொற்றுடன் நியுமோனியா அதிகரித்த காரணத்தால் உயிரிந்துள்ளான்.
மேலும், கொழும்பு 07 பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்றுடன் நியுமோனியா ஏற்பட்ட காரணத்தால் அவர் மரணித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.