உள்நாடு

விமானங்களுக்கான தரையிறங்கல் – தரித்தல் கட்டண அறவீடு இல்லை

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி முதல் ஜனவரி 19 ஆம் திகதி வரை, விமான நிலையங்களில் இருந்து அறவிடப்படும் தரையிறக்கல் மற்றும் தரிப்பிடக் கட்டணங்களை, தற்காலிமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்களைத் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முன்னோடிக் கருத்திட்டமாக எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்களைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, சுற்றுலாத்துறை அமைச்சும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையும் இணைந்து தயாரித்த விசேட நேர அட்டவணைகளுக்கமைய, சர்வதேச விமானக் கம்பனிகள் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

தற்போது சர்வதேச விமானக் கம்பனிகள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளின் மத்தியில் சர்வதேச விமானக் கம்பனிகள் எமது நாட்டுக்கு மேற்கொள்ளும் விமானப் பயண நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் விமானக் கம்பனிகளிடமிருந்து அறிவிடப்படும் தரையிறக்கல் மற்றும் தரித்து வைத்தல் கட்டணங்களை எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விடுவிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரேமலால் ரீட் மனு தீர்ப்பு திங்களன்று [UPDATE]

மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் உற்பத்திக்காக சபுகஸ்கந்த மீண்டும் வழமைக்கு

பேருந்து கட்டணம் குறித்து நாளை தீர்மானம்