(UTV | கொழும்பு) – சனி – வியாழன் கோள்கள் இரண்டும் மிகவும் அருகே நெருங்கி வரும் அரிய நிகழ்வு இன்று நிகழவுள்ளது.
சாதாரணமாக இந்த இரண்டு கோள்களுக்கு இடையேயான ஒருங்கமைவு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என்றாலும், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், இரு கோள்களும் இவ்வளவு நெருக்கத்தில் காட்சியளித்துள்ளன.
இதே போன்ற ஓர் அதிசய நிகழ்வு அடுத்ததாக 2080 ஆம் ஆண்டில் மீண்டும் நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.
21 ஆம் திகதிக்கும் முன்பாகவே இன்றும் கூட சூரியன் மறைந்த சில நிமிடங்களில் வானில் மேற்கு திசையில், இந்த இரண்டு கோள்களையும் பிரகாசமான புள்ளியாக காணமுடியும்.
ஆனால் அந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு படிப்படியாக குறைந்து டிசம்பர் 21 ஆம் திகதியன்று புள்ளி ஒரு டிகிரியாக மாறும். அன்று இந்த கோள்கள் ஒரே புள்ளியில் சேர்ந்து காட்சியளிக்கும் என்றார். சூரியன் மறைந்த பிறகு இதை பார்க்கலாம் என்பதால் இதை வெறும் கண்களால் காணலாம்.
ஆனால் அந்த இரண்டு கோள்களும் அருகில் இருக்காது. அவற்றின் தூரம் மிக அதிக அளவில் இருந்தாலும் அவை நேர்கோட்டில் இணைவதால் அவ்வாறு தோன்றும்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්