உள்நாடு

சில பகுதிகளில் 100 மி.மீ வரையான மழைவீழ்ச்சி

(UTV | கொழும்பு) –  நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யலாம் என எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் சில பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்ற வீசக்கூடுமெனவும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று அரச விடுமுறை

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி

ஏறாவூர் நகர சபை பொது நூலகத்திற்கு தேசிய விருது

editor