(UTV | கொழும்பு) –நாளை காலை 5 மணி முதல் சில பிரதேசங்கள் புதிதாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேலியகொடை – கஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள நெல்லிகஹவத்த மற்றும் பூரணகொட்டு வத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட உள்ளன.
மேலும், கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஶ்ரீ ஜயந்தி மாவத்தையும் நாளை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්