(UTV | முல்லைத்தீவு ) – முல்லைத்தீவு – வவுனத்தீவு குளத்தில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று வவுனத்தீவு குளத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் ஒன்று குளத்தில் வீழ்ந்து மூழ்கியுள்ளது.
இதன்போது வாகனத்தின் சாரதியான 38 வயதுடைய நபரும் , இரண்டு வயதுடைய பெண்பிள்ளை ஒன்றும் 12 வயதுடைய ஆண்பிள்ளை ஒன்றும் நீரில் மூழ்கி காணால்போயிருந்தனர்.
அதிவேகம் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්